Published : 17 Jul 2023 07:09 AM
Last Updated : 17 Jul 2023 07:09 AM
சென்னை: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ்அகாடமியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல் நிலைத் தேர்வுக்கு கட்டணச் சலுகையுடனான 6 மாத கால பயிற்சி வரும் ஆக.12-ம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இப்பணிகளுக்காக தேர்வர்களைத் தயார் செய்யும் நோக்கில் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியும் தமிழ் கட்டாயத் தகுதிப்பாடத்துக்கான பயிற்சியும் நடைபெறுகிறது. வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி மற்றும் ஆன்லைன்மூலம் பயிற்சி வகுப்புகள் 6 மாதகாலம் நடைபெறும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத் தேர்வர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்சியில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள பயிற்சியில் இணைய விரும்பும் தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் தக்க சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து இம்மாதம் 31-ம்தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9150466341, 7448814441 எண்களில் அழைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT