திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கிய முன்னாள் மாணவி மணிமேகலை.
திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கிய முன்னாள் மாணவி மணிமேகலை.

திருப்பத்தூர் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி, புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவி

Published on

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு முன்னாள் மாணவி ஸ்மார்ட் டிவி, புத்தகங்களை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணிமேலை. இவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 1989- 93-ம் காலக்கட்டத்தில் பயின்றார். இந்நிலையில் நேற்று தனது கணவர் அமுதன் மற்றும் குழந்தைகளுடன் தான் படித்த பள்ளிக்கு வந்தார்.

பின்னர் ரூ.50,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி, ரூ.10,000 மதிப்புள்ள புத்தகளை தலைமை ஆசிரியர் சித்திஜவாஹிராவிடம் வழங்கினார். அவரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in