

சென்னை: ஹரியாணா மாநிலம் ஜெட்ஜர் அருகே ஹாசன்பூரில் செயல்படும் எம்.ஆர். கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையத்தில் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இங்கு ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச். என்னும்கால்நடை மருத்துவப் படிப்புகளைபடிக்கலாம். தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இங்கு பயில்கின்றனர். இந்த கல்வியாண்டில் 15-க்கும் மேற்பட்ட தமிழக மாணவ மாணவிகள் அட்மிஷன் பெற்றுள்ளனர். இங்கு படிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும். நீட் தேர்ச்சி தேவையில்லை.
கால்நடை மருத்துவம் படித்தால் பல்வேறு மத்திய மாநில அரசு வேலைகளில் சேரலாம். மேலும் கால்நடை மருத்துவமனை அமைக்கலாம். இதில் ஆராய்ச்சி மேற்கொண்டால் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரியலாம் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது.
இந்த கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே மாணவ, மாணவிகளுக்கு உயர்தர தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய வளாகம், ஹைடெக் மாட்டுப் பண்ணை, முயல் பண்ணை, கோழிப் பண்ணை மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள் உள்ளன. பிஎச்.டி. முடித்த தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குகின்றனர். கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி உட்பட ஆண்டு கட்டணம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே. இந்தக் கல்லூரியில் சேர வரும் 1-ம் தேதி கடைசி நாளாகும்.
எனவே, தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சென்னை, பெங்களூர், ஈரோடு, தருமபுரி ஆகிய பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கைமையத்தை நாடலாம். விவரங்களுக்கு https://mrveterinary.in காணலாம்.