Published : 27 Jun 2023 06:22 AM
Last Updated : 27 Jun 2023 06:22 AM

சாஸ்த்ரா பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு: இணைய வழியில் சேர்க்கை தொடக்கம்

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2023-24-ம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாஸ்த்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் ஜேஇஇ மெயின் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண்களை இணைத்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதுபோன்ற மாணவர் சேர்க்கையை நடத்தும் ஒரே நிகர்நிலை பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே.

சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 24-ம் தேதி வரை பெறப்பட்டு அன்றே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. விரிவான தரவரிசைப் பட்டியல் www.sastra.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலின் முதல் பிரிவில் (50 சதவீத இடங்களுக்கான ஒதுக்கீடு ஜேஇஇ மெயின் மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்) தேசிய அளவில் ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் மணிதீப் முதலிடமும் (99.18%), அதே மாநிலத்தைச் சேர்ந்த சப்பிடி குலதீப் ரெட்டி இரண்டாமிடமும் (98.86%) பெற்றுள்ளனர். அதேபோல இரண்டாம் பிரிவில் (50 சதவீத இடங்கள் பிளஸ்-2 மொத்த மதிப்பெண் அடிப்படையில்) கேரளாவைச் சேர்ந்த எம்.அபிகித் தேசிய அளவில் முதலிடமும், திருச்சி ரோஷினி பானு 2-ம் இடமும் பெற்றுள்ளனர்.

தகுதி அடிப்படையில் வெளிப்படையான மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் ஜூன் 24முதல் தொடங்கியது. ஜம்மு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x