2 கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு கலை கல்லூரிகளில் 75 ஆயிரம் இடங்கள் நிரம்பின

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக 2 கட்டங்களாக நடந்த கலந்தாய்வு முடிவில் சுமார் 75 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இதில் சேர இந்த ஆண்டு 2.46 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.

மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கல்லூரிகள் அளவில் மே 29 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 40,287 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன. அதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதன் முடிவில் சுமார்75 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை (ஜூன் 22) தொடங்குகிறது.கல்லூரிகளில் முதல் நாள் மாணவர்களை வரவேற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in