

சென்னை: சமீபத்தில் வெளியான நீட் 2023 தேர்வு முடிவுகளின்படி ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயின்ற 145 பேர் நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தேசிய அளவிலான பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 57 ஆகாஷ் மாணவ, மாணவிகளும், 50 ரேங்குக்குள் 30 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் வெற்றி பெற எப்படி தங்களை தயார்படுத்திக் கொண்டனர் என்பதைப் பிறரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் வெற்றியாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துருவ், ஷுபம், சூர்யா, ஸ்வயம் ஆகியோர் தங்களின் வெற்றிக் கதைகளை, நீட் தேர்வுக்காக தாங்கள் எடுத்த முயற்சிகள், தயாரிப்புகள் பற்றி விளக்கினர். ஆகாஷ் மூலம் இவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி குறிப்புகள், திறமை வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் ஆகியவை எப்படி உதவின என்றும் கூறினர்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆகாஷ் மாணவர்கள் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 17 மாணவ, மாணவிகள் பல்வேறு மாநிலங்களில் டாப்பர்களாக வந்துள்ளனர். இந்த சிறப்பு வாய்ந்த முடிவுகளால் ஆகாஷ் நிறுவனம் போட்டித் தேர்வுக்கான முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது.
ஆகாஷ் கல்வி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.