

சென்னை: அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி 2023-ன் இரண்டாவது பதிப்பு, சென்னையில் கலாச்சார மையத்தில் இன்று தொடங்குகிறது. நாளை வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
மதுரையில் ஜூன் 20-ம் தேதி ரெசிடென்சி ஹோட்டலிலும், திருச்சியில் 21-ம் தேதி ஃபெமினா ஹோட்டலிலும், சேலத்தில் ஜூன் 22-ம் தேதி ஜிஆர்டி ஹோட்டலிலும், கோயம்புத்தூரில் ஜூன் 23-ம் தேதி தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலிலும் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளுக்கான உடனடி அட்மிஷன் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் ரஷ்யாவின் பிரபல பல்கலைக்கழகங்கள் கலந்து கொள்ள உள்ளன. குறிப்பாக, வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், இமானுவேல் காண்ட் பால்டிக் பெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம், குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகம் மாஸ்கோ இயற்பியல் தொழில் நுட்ப நிறுவனம் உள்ளிட்ட நிறுவ னங்கள் பங்கேற்க உள்ளன.
2023-24-ம் நிதியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை வழங்க ரஷ்ய பல்கலைக்கழகங்கள் முன்வந்துள்ளன.
எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய நிபந்தனைகளை ரஷ்ய பல்கலைகழகங்கள் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.