Published : 17 Jun 2023 05:26 AM
Last Updated : 17 Jun 2023 05:26 AM

நீட் தேர்வில் முதல் 20 பேரில் 5 பேர் ஆலன் மாணவர்கள் - 116 பேர் 700 மதிப்பெண் பெற்றனர்

சென்னை: நீட் தேர்வில், ஆலன் மாணவர்கள் மீண்டும் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தேர்வில் தேசிய அளவில் முதல் 20 இடங்களில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் நிறுவனத் தலைவர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறியதாவது: ஆலன் மாணவரான பார்த் கந்தல்வால் நீட் தேர்வில் 715 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 10-ம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் மாநில டாப்பராகவும் உள்ளார். அதேபோல ஷஷாங்க் குமார் (715) தேசிய அளவில் 14-ம் இடமும் பிஹார் மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

ஷுபம் பன்சால் (715) தேசிய அளவில் 16-ம் இடமும் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மேலும் அர்நப் பதி 715 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 19-ம் இடமும், ஷஷாங்க் சின்ஹா 712 மதிப்பெண்களுடன் 20-ம் இடமும் பெற்றுள்ளனர். இப்படி 5 ஆலன் மாணவர்கள் தேசிய அளவில் சாதித்துள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி தேசிய அளவில் முதல் 50 இடங்களுக்குள் 17 ஆலன் மாணவர்களும், 100 இடங்களுக்குள் 30 பேரும் வந்திருப்பது சிறப்பு. 116 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மொத்தமாக ஆலனில் படித்த 97,946 பேர் நீட்டில் சாதித்துள்ளனர்.

நீட் வெற்றியாளர்களின் விழா ஜவஹர் நகரில் உள்ள ஆலன் சத்யார்த் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர் என்று கூறினார். 

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x