Published : 17 Jun 2023 07:06 AM
Last Updated : 17 Jun 2023 07:06 AM

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்வழி தேர்வுக்கு பயிற்சி

கோப்புப்படம்

சென்னை: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 27 வயதுக்கு உட்பட்ட தேர்வர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப்பணித் தேர்வுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையில் தமிழ்வழிப் பயிற்சிக்கான சேர்க்கை வரும் ஜூன் 20-ல் நடக்கிறது.

இந்தியக் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான 11 மாத கால பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படும். வாரந்தோறும் மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப்புகளும் வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் சந்திப்பும் இப்பயிற்சியில் அடங்கும்.

10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், அகாடமி நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்தியக் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் சாதிச் சான்றிதழ் நகலையும் இணைத்து அகாடமிக்கு 2165, எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக வருகின்ற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x