Published : 17 Jun 2023 07:10 AM
Last Updated : 17 Jun 2023 07:10 AM
சென்னை: வேப்பேரி பெரியார் திடலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பெரியார் ஐஏஎஸ் அகாடமியில் 2023-24-ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன.
இதனையொட்டி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகள் குறித்த சந்தேகங்கள், விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும் முறை, போட்டித் தேர்வுக்குத் தயார்செய்யும் முறை போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு வரும் ஜூன் 19-ம் தேதி(திங்கள்கிழமை) மாலை 4 மணிமுதல் 7 மணிவரை நடைபெறவுள்ளது.
பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் இருக்கைக்கு 044-26618056 / 9940638537 / 9092881663 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT