

சென்னை: ஃபிட்ஜி குழுமம் ஜேஇஇ, நீட் ஆகிய தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் நிகரற்ற நிபுணத்துவத்துக்கு புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது.
ஃபிட்ஜி சார்பில் எம்சிசிஆடிட்டோரியத்தில் `த ஆர்ட் ஆஃப் பேரன்டிங்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகளில் அபார வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களின் ஆழ்ந்த நுண்ணறிவு, விலைமதிப்பற்ற அனுபவங்களைப் பிற பெற்றோர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களும் தங்கள் பிள்ளைகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வழிகாட்டினர்.
சென்னை ஐஐடியில் படிக்கும் பூஜா, ஸ்ரீஜா ஆகியோரின் தந்தை குமார், இதே கல்லூரியில் படிக்கும் ப்ரணவ், விட்டல் ஆகியோரின் தந்தை ராமகிருஷ்ணன் மற்றும் தாய், மும்பை ஐஐடியில் பிடெக் பயிலும் ரிஷப் ராஜ் பிரகாஷின் பெற்றோர்களான ராம் பிரசாத், ராஜலட்சுமி, கரக்பூர் ஐஐடியில் பிடெக் படிக்கும் அனிருத் முரளியின் தாய் கோமதி, ஷ்ரவண் (மும்பை ஐஐடி) பெற்றோர் வி.கிருத்திகா & ராகவன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் ஆகாஷின் தந்தை சுப்பிரமணியன், புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் படிக்கும் அனிஷின் தந்தை சுப்பையா ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.இவ்வாறு ஃபிட்ஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.