நீட் தேர்வில் புதுவையில் 3,140 மாணவர்கள் தேர்ச்சி - கடந்த ஆண்டை விட 2.15% உயர்வு

நீட் தேர்வில் புதுவையில் 3,140 மாணவர்கள் தேர்ச்சி - கடந்த ஆண்டை விட 2.15% உயர்வு
Updated on
1 min read

புதுச்சேரி: நீட் தேர்வில் புதுச்சேரியில் 3,140 மாணவ, மாணவி கள் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டை விட 2.15 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடந்தது. இதில், புதுவையில் 5 ஆயிரத்து 714 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமை இணையத்தில் வெளியானது. புதுவையை சேர்ந்த 3 ஆயிரத்து 140 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை மாணவர் அசோக்குமார் 720-க்கு 700 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் 287-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட 2.15 சதவீத புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆளுநர் தமிழிசை வாழ்த்து: இந்நிலையில் ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்தமாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்க ளைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு வாழத்துகள்.

நீட் தேர்வில் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர், ஆசிரியர்கள் அனை வருக்கும் பாராட்டுகள். தமிழக மாணவர்கள் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது வருங்கால மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. நீட் தேர்வால் ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு நிறைவேறுகிறது.

தமிழக மாணவர்கள் படைத்துள்ள சாதனை நீட் தேர்வை பற்றிய அவநம்பிக்கையை போக்கி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாக நீட் தேர்வு பலமாகவும், பாலமாகவும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in