பழநியில் சித்த மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு ரூ.70 கோடி நிதி

சித்த மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ள பழநி அருகேயுள்ள தட்டான்குளம் பகுதி
சித்த மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ள பழநி அருகேயுள்ள தட்டான்குளம் பகுதி
Updated on
1 min read

பழநி: பழநியில் சித்த மருத்துவக் கல் லூரி கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளுக்கு, மத்திய ஆயுஷ் துறை ரூ.70 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி யில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி அமைக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பல ஆண்டு களுக்கு முன்பு சிவகிரிபட்டி ஊராட்சி தட்டான்குளம் பகுதியில் 38 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. பின்னர், பல்வேறு காரணங்களுக்காக இக்கல்லுாரி சென் னைக்கு மாற்றப்பட்டது.

அதையடுத்து, சித்த மருத் துவக் கல்லுாரி தொடங்கும் முயற்சியில், கடந்த 2019-ம் ஆண்டு பழநி வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் 60 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. சில மாதங்களில் மருத்துவமனை பூட்டப் பட்டது. இதற்கிடையே, பழநி தண்டாயு தபாணி சுவாமி கோயில் நிர்வா கத்தின் கீழ், சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது.

தற்போது, ரயில் நிலைய சாலையில் உள்ள பழநி முருகன் கோயிலுக்குச் சொந்த மான வேலவன் தங்கும் விடுதி வளாகத்தின் ஒரு பகுதி சித்த மருத்துவமனையாக மாற்றப்பட்டு, கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 25 முதல் 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், சித்த மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு, ஆரம்ப கட்டப் பணிகளுக்காக மத்திய ஆயுஷ் துறை தனது பங்களிப்பாக ரூ.70 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், பழநி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சித்த மருத்துவக் கல்லூரி கனவு நிறைவேற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in