பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு - மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு - மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது.

தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (ஜூன் 7) மதியம் நகல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்பின்மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், அதற்கான விண்ணப்பப் படிவங்களை அதே இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து, நாளை (ஜூன் 8) முதல் 10-ம் தேதி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைபயன்படுத்தியே பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in