

மதுரை: மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம் ஆங்கிலம் -தமிழ் வழி சுழற்சி, வேதியியல் ஆங்கிலம் -தமிழ் வழி, இயற்பியல் ஆங்கிலம் -தமிழ் வழி, விலங்கியல் ஆங்கில வழி, புவியியல் ஆங்கிலம் -தமிழ் வழி, கணினி அறிவியில் ஆங்கில வழி, கணினி பயன்பாட்டியல் ஆங்கில வழி , மனையியல் ஆங்கில வழிக்கான சேர்க்கை ஜூன் 12ம் தேதி நடக்கிறது.
14ம் தேதியில் வரலாறு ஆங்கிலம் -தமிழ் வழி, பொருளியல் ஆங்கிலம் -தமிழ் வழி, வணிகவியல் ஆங்கில வழி 1,2 மற்றும் வணிக நிர்வாகவியல் ஆங்கில வழி பாடபிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
16ம் தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுக்கான இரு சுழற்சிக்கும் நடக்கிறது. காலை 9 மணி முதல் தொடங்கி நடக்கிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் அசல், நகல் (ஒப்பம் பெற்றது), பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், 3 பாஸ்போர்ட் புகைப்படம், தோராயமாக கல்விக் கட்டணம் ரூ. 2,350, வங்கி சேமிப்பு புத்தக நகல், பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவ நகல்களுடன் மாணவிகள் வரவேண்டும். மதிப்பெண் தரவரிசை, இன சுழற்சி மற்றும் காலியிடம் அடிப்படை மாணவிகள் தெரிவு செய்யப்படுவர் என கல்லூரி முதல்வர் சூ.வானதி தெரிவித்துள்ளார்.