சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு எழுதவுள்ள பட்டதாரிகளுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு, சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி, நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாளை (ஜூன் 6) தொடங்கி 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டை பட்டதாரிகள் csirnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை ww.nta.ac.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in