Published : 04 Jun 2023 04:07 AM
Last Updated : 04 Jun 2023 04:07 AM
சென்னை: இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில வசதியாக சென்னையில் மிகப்பெரிய வெளிநாட்டுக் கல்விக் கண்காட்சி ஒன்றை ஜார்ஜியா தூதரகம் நேற்று நடத்தியது.
இதில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜார்ஜியாவின் 11 பல்கலைக் கழகங்கள் மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை ஆலோசனை மற்றும் உதவித் தொகை பலன்கள் மற்றும் அவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
இதில் பங்கேற்ற ஜார்ஜியாவின் தூதர் ஆர்ச்சில் டுலியாஷ்விலி கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளையும் தாண்டி ஒரு மிகப்பெரிய வரவேற்பை இந்த முறை நாங்கள் பெற்றுள்ளோம். பல்வேறு நகரங்களில் இருந்து வரும் இந்திய மாணவர்களுக்கு இந்த கல்வி கண்காட்சியில் ஏராளமான தகவல்கள் அளிக்கப்பட்டன. எங்கள் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆலோசகர்கள், வெளிநாட்டு கல்வி பற்றிய முழுமையான புரிதலை வழங்கினர்’’ என்றார்.
இக்கண்காட்சியில் 11 பல்கலைக் கழகங்கள் பங்கேற்றன. மேலும் சேர்க்கை வழிகாட்டுதல்கள், படிப்புகள், வேலை வாய்ப்பு வாய்ப்புகள், தகுதிக்கான அளவுகோல்கள், உதவித் தொகை, கட்டண அமைப்பு பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT