Published : 27 Jul 2014 10:00 AM
Last Updated : 27 Jul 2014 10:00 AM

தாயுடன் இறந்து கிடந்த சினிமா உதவி இயக்குநர்: தற்கொலையா என போலீஸார் விசாரணை

சிவகங்கை அருகே ஊர் கண்மாய் கரையில் சினிமா உதவி இயக்குநரும், அவரது தாயும் இறந்துகிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே உள்ள கானூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி சரஸ்வதி (50). இவர்களது மகன் செந்தில்குமார் (30). ஜெயராமன் இறந்துவிட்டதையடுத்து, சரஸ்வதியும் செந்தில்குமாரும் 10 ஆண்டுகளாக சென்னை வடபழனியில் வசித்து வந்தனர்.

சிறுசிறு வேடங்களில் நடித்தவர்

செந்தில்குமார் சினிமாவில் உதவி இயக்குநராகவும், தயாரிப்பு நிறுவன மேலாள ராகவும் பல படங்களில் பணிபுரிந் துள்ளார். சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கானூர் கண்மாய் கரையில் தாயும் மகனும் இறந்துகிடந்தது சனிக்கிழமை காலை தெரியவந்தது. அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு கானூர் விலக்கில் பஸ்ஸில் இருந்து இறங்கியதை ஊர் மக்கள் சிலர் பார்த்துள்ளனர்.

கானூர் வி.ஏ.ஒ. கொடுத்த புகாரின்பேரில் திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

கடிதத்தை எரித்த உறவினர்கள்?

செந்தில்குமாருக்கு சொந்த மான பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள நிலங்களை அவரது உறவினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, அவரிடம் ஒப்படைக்க மறுத்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் இதுதொடர்பாக செந்தில் குமார் கடிதம் எழுதி வைத்திருந் ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த உறவினர்கள் போலீஸுக்கு தெரிவிக்காமல் சடலங்களை எரிக்க முயன்ற தாகவும் கூறப்படுகிறது.

ஆனால் வி.ஏ.ஓ. (பொறுப்பு) பிரபாகரன் தகவல் கொடுத்ததால் போலீஸார் வந்து சடலங்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனராம்.

மேலும் செந்தில்குமாரின் கடிதம் மற்றும் சினிமாவுக்கு அவர் எழுதி வைத்திருந்த கதை களை அவரது உறவினர்கள் எரித்துவிட்டதாகக் கூறப்படும் புகார் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x