Published : 11 Jul 2014 11:09 AM
Last Updated : 11 Jul 2014 11:09 AM

மதுரையில் காங்கிரஸ் நிர்வாகி சகோதரர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

மதுரை தொழிலதிபரான, காங்கிரஸ் நிர்வாகியின் சகோதரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காதல் விவகாரத்தில் மிரட்டல் விடுக்க மர்மநபர்கள் குண்டு வீசி சென்றனரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியிலுள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சக்தி வேல் (52). மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் தேவராஜின் சகோதரரான இவர் கட்டுமானப் பணிகளுக்கான இரும்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். புதன் கிழமை இரவு தனது குடும்பத்தி னருடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.

2 குண்டுகள் வீச்சு

வியாழக்கிழமை அதிகாலை 2 பேர் சக்திவேல் வீட்டுக்கு வந்த னர். அவர்கள் ஒரு பெட்ரோல் குண்டை வீட்டின் மின் இணைப்பு பெட்டி மீது வீசினர். அதன்பின் மற்றொரு குண்டை கார் மீது வீசிவிட்டு தப்பினர். அந்த குண்டு வெடித்து சிதறியதில் காரின் வெளிப் பகுதி சேதமடைந்தது. மேலும் அருகிலிருந்த சக்கர நாற்காலி, புத்தகப் பை ஆகியன தீப்பற்றி எரிந்தன.

இதற்கிடையே, வெடிகுண்டு சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக் காரர்கள் வெளியே வந்து பார்த்த போது சக்திவேல் வீட்டு தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு சக்திவேல் குடும்பத்தினர் வெளியே வந்து தீயை அணைத் தனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி கேமராவில் பதிவு

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்த காட்சிகளைப் பார்த்தபோது அதிகாலை 4.24 மணிக்கு 2 இளைஞர்கள் குண்டுகளை வீசி விட்டு வேகமாக தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் யார் என கண்டறிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டின் முன் சிதறிக்கிடந்த பாட்டில் சிதறல் களை எடுத்து ஆய்வு செய்தபோது, அதில் பெட்ரோலுக்கு பதில் மண்ணெண்ணெய் நிரப்பி வீசி வெடிக்கச் செய்திருந்தது தெரிய வந்தது. எனவே சக்திவேல் குடும் பத்தை மிரட்டும் நோக்கில் இதுபோல் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுபற்றி தனிப்படை போலீ ஸார் கூறும்போது, ‘கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ.25 லட்சம் பணம் கேட்டு சக்திவேல் மகனை கடத்தப்போவதாக போன் மூலம் மிரட்டல் வந்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக்திவேல் மகன் காதல் விவகாரத்தில் இந்த குண்டு வீச்சு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x