Published : 30 Aug 2017 06:53 PM
Last Updated : 30 Aug 2017 06:53 PM

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு: உங்கள் கருத்து என்ன?

தமிழக அரசு வரும் செப்.1 முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் இது போன்றதொரு சிறை தண்டனை இல்லாத நிலையில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் இது போன்ற அறிவிப்புகள் பொது மக்களுக்கு இடையூறா?

*ஓட்டுநர் உரிமம் இல்லாத போது அதை அடுத்து வரும் நாட்களில் அதிகாரியிடம் காண்பிக்கலாம் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படவில்லையா?

*ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் அதை மீண்டும் விண்ணப்பித்து பெறும் சிக்கலான நடைமுறைக்கு பதில் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் விரல் ரேகை மூலம் பரிசோதிக்கும் நடைமுறை அமல்படுத்த அரசு சிந்திக்க வேண்டுமா?

*ஓட்டுநர் உரிமத்தை குடும்ப அட்டை போல் ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றலாம் என்ற நடைமுறை பயன் தரும் அல்லவா? அதுபோன்று மாற்றம் செய்யும் போது உரிமம் தொலைந்து போனாலும் அருகில் உள்ள இ சேவை மையத்தில் ரூ.30-க்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க வாய்ப்புண்டு. அதை அரசு நடைமுறைக்குக் கொண்டு வருமா?

* ஓட்டுநர் உரிமத்தை ஈடாக கொடுத்து வாகனங்களை இயக்கும் லாரி, ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் இந்த அறிவிப்பின் மூலம் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே?

*குற்ற நடவடிக்கையில் ஈடுபடாத சராசரி உழைப்பாளி ஒருவர் அதிகாரி சோதனை செய்யும் போது ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் மூன்று மாதம் சிறையில் தள்ளப்பட்டால் அவர் குடும்பம் என்ன ஆகும். பின்னர் அவர் மீண்டும் அதே வாகன் ஓட்டுநர் தொழிலில் ஈடுபட முடியுமா?

* சாலைப்போக்குவரத்தில் மாற்ற வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது இது போன்ற அதிரடி நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக்கும் வழிமுறைகளை அரசு எப்படி கையாளலாம்?

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு வரவேற்கத்தக்கதா? பொதுமக்களுக்கு இன்னலா? இது பற்றிய உங்கள் கருத்தை இங்கே பகிரலாம்.

வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x