Published : 03 Jan 2014 03:56 PM
Last Updated : 06 Jun 2017 05:29 PM
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மன்மோகன் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் செய்தியாளர்களைச் சந்திப்பது மூன்றாவது முறை.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் முன்வைத்த வெளியிட்ட இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.
காங்கிரஸ் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமராகும் எண்ணம் தனக்கு இல்லை; ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் என்று, செய்தியாளர் கூட்டம் தொடங்கியவுடனே முதல் விஷயமாக தெளிவுபடுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியப் பிரதமராக அனைத்துத் தகுதியும் உள்ளது. ஆனால், அந்த முடிவை தக்க நேரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும். நாட்டை இளையத் தலைமுறையினர் வழி நடத்துவார்கள் என்றார் பிரதமர்.
பிரதமரின் இந்தக் கருத்துகள், காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி விரைவில் அறிவிக்கப்படுவார் என்ற நம்பத்தகுந்த வதந்திகளின் உண்மைத் தன்மைக்கு வலுவூட்டுகின்றன.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதுடன், அவரை முன்னிலைப்படுத்தியே அக்கட்சி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சூழலில், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால்..?
காங்கிரஸ் சந்திக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன?
பிரதமர் வேட்பாளர்களாக மோடி - ராகுல் இடையிலான போட்டி எத்தகையதாக இருக்கும்?
விவாதிக்கலாம் வாருங்கள்.