

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.21-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் சர்ச்சை நீங்கியதைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் உட்கட்சி சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் தற்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து சின்னத்தை கைப்பற்றிதால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா?
சின்னம் பறிபோனதால் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக உருவான அதிமுக (அம்மா) கட்சி முடிவுக்கு வந்துள்ளது. டிடிவி தினகரன் இனிமேல் கட்சிப் பெயரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பெயரில் கட்சி தொடங்கி, பதிவு செய்வதுதான் அவருக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு என்று கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் அப்படி ஒரு கட்சி தொடங்கினால் அவருக்கு கணிசமான வாக்கு வங்கி கிடைக்குமா?
இல்லை, அரசின் தலைமைச் செயலராக இருந்தவர் தொடங்கி அமைச்சர்கள் அவர்களது உறவினர்கள் என பலரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதால் மக்கள் அதிருப்தி அத்தனையும் திமுகவுக்கு வாக்குகளாக மாறுமா?
இல்லை இந்த திராவிட கட்சிகளே வேண்டாம் என பாஜகவுக்கு தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு அளிக்கப்படுமா? யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? விவாதிக்கலாம் வாருங்கள்.