விவாதக் களம்: குழந்தைகள் வளர்ப்பில்... நாம் எப்படி?

விவாதக் களம்: குழந்தைகள் வளர்ப்பில்... நாம் எப்படி?
Updated on
1 min read

எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவை அத்தனையும் குழந்தைச் செல்வத்தால்தான் அர்த்தமாகின்றன. குழந்தைகள்தான் ஈடு இணையில்லாத செல்வங்கள்; பொக்கிஷங்கள். ஆனால் குழந்தைகளுக்கும் நமக்குமான உறவில் ஒரு சின்ன சிக்கல்... குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளரவிடுகிறோமா?

நாம் எல்லோரும் கேட்டுக் கொள்ளவேண்டிய, அவசியமான கேள்வி இது.

குழந்தைகளைக் கண்ணாடிகள் என்று யாரோ ஓர் கவிஞன் எழுதிவைத்தான். ஒருவகையில், இந்தக் கவிதையின் அர்த்தம் உண்மைதான். கண்ணாடிகள் என்பது நம் பிம்பம் காட்டும் உபகரணம்தான். நாம் தான் நிஜமெனில்... கண்ணாடிதான் குழந்தைகள். நம்மைப் பிரதிபலிப்பதில் எப்போதுமே நமக்குச் சந்தோஷம் உண்டு. ஆனால் நம் குழந்தைகள், நம்மை எப்படியாகப் பார்க்கிறார்கள், எவ்விதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் வகையில், நாம் வாழ்கிறோமா. ஆகச் சிறந்த ரோல்மாடல்களாக நாம் அவர்களுக்கு இருக்கிறோமா?

போட்டிகள் நிறைந்த உலகம்தான். ஆனால் எப்போதுமே நம் குழந்தைகளைப் போட்டியாளர்களாக வைத்திருப்பது நியாயம்தானா? கொஞ்சம் யோசிப்போம். குழந்தைகளை சீராக சுவாசிக்க விடுவோம். ஏனெனில்... நம் சுவாசமே அவர்கள்தானே!

குழந்தைகள் வளர்ப்பில், வார்ப்பில்... உங்கள் கருத்து என்ன... அந்தக் கருத்துகள் ஏதோவொரு வகையில், ஏதோ செய்யட்டுமே! உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in