சிங்கம்புணரி: யூடியூபில் பிரபலமாகி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது!

கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் நெடுஞ்செழியன் - பச்சை துண்டு, வேட்டி அணிந்திருப்பவர்.

கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் நெடுஞ்செழியன் - பச்சை துண்டு, வேட்டி அணிந்திருப்பவர்.

Updated on
1 min read

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் யூடியூபில் பிரபலமாகி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். அவரது மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்து தைலங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (45). இவர் சிங்கம்புணரியில் புத்தூர் கட்டு பாண்டி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தார். எலும்புமுறிவு, முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்ததால், அவரது மருத்துவமனைக்கு தமிழகம் முழுவதுமிருந்து தினமும் 200 முதல் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்தனர். இவர்கள் அதிகாலையிலிருந்து காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

இந்நிலையில், அவர் தவறான சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடிக்கு புகார் வந்தது. ஆட்சியரின் உத்தரவின்பேரில், தேவகோட்டை சார் -ஆட்சியர் ஆயுஷ்வெங்கட் வட்ஸ் தலைமையில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அருள்தாசன், மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் கவுரி, டிஎஸ்பி செல்வக்குமார், வட்டாட்சியர் நாகநாதன் ஆகிய அதிகாரிகள் இன்று மாலை புத்தூர்கட்டு பாண்டி மருத்துவமனையை சோதனையிட்டனர்.

இதில், பிளஸ் 2 வரை படித்த நெடுஞ்சசெழியன், திண்டுக்கல்லில் அனுமதி பெறாத நிறுவனத்தில் பாரா மெடிக்கலில் உதவி செவிலியர் படிப்பை படித்துள்ளார். மேலும் இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல மருத்துவரின் சான்றை போலியாக பயன்படுத்தி மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அருள்தாசன் புகாரின் பேரில், நெடுஞ்செழியனை சிங்கம்புணரி போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்ததோடு, அங்கிருந்த ஏராளமான தைலங்களையும் பறிமுதல் செய்தனர். அப்போது சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருள்தாசனிடம் கேட்டபோது, “நெடுஞ்செழியன் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் ஓராண்டுக்கு முன் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அங்கு பிரச்சினை ஏற்பட்டதும், இங்கு வந்து மருத்துவமனை நடத்துகிறார். இவர் முடித்த பாரா மெடிக்கல் படிப்பு கூட அனுமதியில்லாத நிறுவனத்தில் படித்துள்ளார். மருத்துவமனை நடத்த பிரபல மருத்துவரின் சான்றை போலியாக பயன்படுத்தியதோடு, முறைப்படி பதிவும் செய்யவில்லை.

இவர் சிகிச்சைக்கு நல்லெண்ணெய், புங்கை எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றில் பூவரசு பட்டையை சேர்த்து காய்ச்சி தைலமாக பயன்படுத்தி வந்துள்ளார்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் நெடுஞ்செழியன் - பச்சை துண்டு, வேட்டி அணிந்திருப்பவர்.</p></div>
அதிக மைதானங்களில் சதம்: சச்சின் சாதனையை தகர்த்த கோலி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in