

கொலையான சசிகுமார்
கடலூர்: கடலூர் அருகே ரங்கா ரெட்டிப்பாளையத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கடலூர் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (31). இவரையும் இவரது நண்பர் ராஜாவையும் ரங்கா ரெட்டிப்பாளையத்தில் 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. தப்பி ஓடிய இருவரையும் விரட்டிய கும்பல் சசிகுமாரை வெட்டிக் கொன்றது.
தகவலறிந்த ரெட்டிச் சாவடி போலீஸார் உடலை பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பியோடிய ராஜா போலீஸாரிடம் சரணடைந்தார்.
கடலூர் மற்றும் புதுச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்ததநிலையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.