கோவை: ஒரே எண்ணில் 2 இருசக்கர வாகனங்களை பயன்படுத்திய இளைஞர்களுக்கு ரூ.9,400 அபராதம்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

கோவை: கோவை கவுண்​டம்​பாளை​யம் பகு​தி​யில் ஒரே எண் கொண்ட இரண்டு இரு சக்கர வாகனங்​களை இளைஞர்​கள் பயன்​படுத்​தியது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது.

மாநகர காவல் ஆணை​யர் என்​.கண்​ணன் உத்​தர​வின் பேரில், மேற்​குப்​பிரிவு போக்​கு​வரத்து போலீ​ஸார் விசா​ரித்​தனர். அதில், கவுண்​டம்​பாளை​யத்​தைச் சேர்ந்த சிபி(24), அஸ்​வின்​(18) ஆகி​யோர் ஒரே எண் கொண்ட இருசக்கர வாக​னங்களை பயன்​படுத்​தி​யது தெரிய​வந்​தது.

சிபி சொந்​த​மாக கார் சுத்​தம் செய்​யும் நிறு​வனம் நடத்தி வரு​கி​றார். அஸ்​வின் ஐ.டி.ஐ மாண​வர். இதுதொடர்​பாக மாநகர காவல் துணை ஆணை​யர் (போக்​கு​வரத்​து) மகேஸ்​வரன் கூறும்​போது,‘‘​போக்​கு​வரத்து போலீ​ஸார், ஆர்டிஓ விசா​ரித்​த​தில், டிஎன் 21 சி 2697 என்ற எண் சிவப்பு வண்ண யமஹா வாகனத்​துக்கு உரியது ஆகும். இந்த வாகன உரிமை​யாளர் காஞ்​சீபுரத்தை சேர்ந்த ராஜேந்​திரன் என ஆவணத்​தில் உள்​ளது.

வாக​னத்தை வாங்​கிய​போது பெயர் மாற்​றப்​பட​வில்​லை. இந்த வாக​னத்தை சிபி பயன்​படுத்​தி​யுள்​ளார். அவர் தலைக்​கவசம் அணி​யாதது, காப்​பீடு காலா​வ​தி​யானதற்​காக ரூ.1,700 அபரா​த​மாக விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதே எண்​ணுடன் இருந்த மற்​றொரு வாக​னத்​தின் அசல் எண் டிஎன் 20 சி 5751 ஆகும். ஆனால், இந்த எண்ணை அஸ்​வின் பயன்​படுத்​தாமல், சிபி​யின் வாகன எண்ணை பயன்​படுத்​தி​யுள்​ளார்.

இந்த வாக​னத்​தின் உரிமை​யாளர் மணப்​பாறையை சேர்ந்த நல்​லமணிவேல் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த வாக​னத்தை வாங்கிய போதும் பெயர் மாற்றப்​ படா​மல் உள்ளது.

தலைக்​கவசம் அணி​யாதது, மற்றொரு வாகன எண்ணை பயன்​படுத்​தி​யது, காப்​பீடு இல்​லாதது உள்​ளிட்ட பல்​வேறு மோட்​டார் வாக​னச் சட்ட விதி மீறல்களுக்கு ஏற்ப அஸ்வினுக்கு மொத்தம் ரூ.7,700 அபரா​தம்​ வி​திக்​கப்பட்​டுள்ளது’’ என்றார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றை சக்கர சைக்கிள் பயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in