உச்சக்கட்ட 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு

உச்சக்கட்ட 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு
Updated on
1 min read

சென்னை: குடியரசு தினத்தை முன்​னிட்​டு, சென்னை விமான நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி​முதல் வரும் 30-ம் தேதிவரை 5 அடுக்கு பாது​காப்​பும், 24, 25, 26 ஆகிய தேதி​களில் மட்​டும் உச்​சக்​கட்​ட​மாக 7 அடுக்கு பாது​காப்​பும் அமலில் உள்​ளது.

விமான நிலை​யத்​தின் உள்​பகு​தி​யில், மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினரும், வெளிப்​பகு​தி​யில் போலீ​ஸாரும் காவல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். வெடிகுண்டு நிபுணர்​கள் மோப்ப நாய்​கள் உதவி​யுடன், தீவிர சோதனை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். விமான நிலை​யத்​துக்​குள் செல்​லும் பயணி​கள், விமான நிலைய ஊழியர்​கள் தீவிர சோதனைக்கு உட்​படுத்​தப்​படு​கின்​றனர்.

இப்​படி உச்​சக்​கட்ட பாது​காப்பு இருக்​கும் நிலை​யில், நேற்று சென்னை உள்​நாட்டு விமான நிலை​யம் டெர்​மினல்-1 வருகை உள்​பகு​தி​யில், டிரான்​சிட் விமானப் பயணி​கள் செல்​லக்​கூடிய கேட் எண் 103 அருகே சுமார் 25 வயது இளைஞர் ஒரு​வர் சந்​தேகப்​படும் விதத்​தில் சுற்​றிக் கொண்​டிருந்​தார்.

விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை கண்​காணிப்பு கேம​ரா​வில் பார்த்த பாது​காப்பு உயர் அதி​காரி​கள், இது பற்றி பணியி​லிருந்த மத்​திய தொழில் பாது​காப்​புப் படை அதி​காரி​களுக்கு தெரி​வித்​தனர். உடனடி​யாக அங்கு சென்ற மத்​திய தொழில் பாது​காப்​புப்படை வீரர்​கள், அந்த இளைஞரைப் பிடித்து விசா​ரித்​தனர்.

பயணி​கள் வருகை பகு​திக்​குள் நின்​றிருந்த அவரிடம் விமான டிக்​கெட் அல்​லது விமான நிலை​யத்​துக்​குள் வரு​வதற்​கான பாஸ் எது​வும் இல்​லை. அப்​போது அந்த இளைஞர் விமான நிலை​யத்​தையே, விலைக்கு வாங்க இருப்​ப​தாக​வும், அதற்​காக விமான நிலை​யத்தை பார்​வை​யிட உள்ளே வந்​த​தாக​வும் அதி​காரி​களிடம் தெரி​வித்​தார்.

தொடர்ந்து நடத்​திய விசா​ரணை​யில் அந்த நபர் சென்னை அரும்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த ஜோஸ்வா (26) என்​பதும், அவர் மனநிலை பாதிக்​கப்​பட்​ட​வர் என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவரை விமான நிலைய போலீ​ஸாரிடம் அதி​காரி​கள் ஒப்​படைத்​தனர். அவரிடம் போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். உச்​சக்​கட்ட பாது​காப்பை மீறி இளைஞர் ஒரு​வர் வி​மான நிலை​யத்​துக்​குள் நுழைந்​த​தால், பாது​காப்பு அதி​காரி​களிட​மும்​ வி​சா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டு வரு​கிறது.

உச்சக்கட்ட 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு
தைப்பூச விழா கொண்டாட்டம்: மொரீஷியஸில் பக்திப் பாடல்கள் பாட 7 பேர் குழு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in