திருவொற்றியூரில் செவிலியர் ஊசி செலுத்திய சில நிமிடங்களில் இளைஞர் மரணம்: போலீஸார் விசாரணை

லோகேஷ்

லோகேஷ்

Updated on: 
1 min read

சென்னை: ​திரு​வொற்​றியூரில், ஊசி செலுத்​திய சில நிமிடங்​களி​லேயே இளைஞர் மரணம் அடைந்​தார். இறப்​புக்கு தவறான சிகிச்சை காரண​மா? என போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை மாதவரம் பால்​பண்ணை மூலச்​சத்​திரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் லோகேஷ் (26). மது பழக்​கத்​துக்கு அடிமை​யானவர் என கூறப்​படு​கிறது. இவருக்கு கடந்த ஆண்டு திரு​மணம் நடை​பெற்​றுள்​ளது.

இந்​நிலை​யில், மது பழக்​கத்​திலிருந்து மீட்​ப​தற்​காக லோகேஷை அவரது பெற்​றோர் கடந்த 29-ம் தேதி மூலக்​கடை பகு​தி​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு நேற்று முன்​தினம் மாலை பணி​யில் இருந்த செவிலியர் ஒருவர் லோகேஷுக்கு ஊசி செலுத்​தி​ உள்​ளார்.

ஊசி செலுத்​திய சில நிமிடங்​களி​லேயே லோகேஷின் உடல்​நிலை மோசமடைந்​த​தாக தெரி​கிறது. அப்​போது மருத்​து​வ​மனை​யில் டாக்​டர்​கள் யாரும் இல்​லாத​தால், செவிலியர் ஆம்​புலன்சை வரவழைத்து லோகேஷை மாதவரத்​தில் உள்ள மற்​றொரு தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்க ஏற்​பாடு செய்​தார்.

இதற்​கிடையே அங்கு வந்த ஆம்​புலன்ஸ் ஊழியர்​கள் லோகேஷை பரிசோ​தித்​து​விட்​டு, அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். ஆனால், லோகேஷ் உயிருடன் இருப்​ப​தாக​வும், தாங்​கள் பரிசோ​தித்​து​விட்​ட​தாக​வும் செவிலியர் கூறி, அவரை ஆம்​புலன்​சில் மற்​றொரு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​துள்​ளார்.

அங்கு லோகேஷை பரிசோ​தித்த டாக்​டர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​ததுடன், அவரது உடலை மீண்​டும் சம்​பந்​தப்​பட்ட நர்​சிங் ஹோமுக்கு அனுப்பி வைத்​தனர்.

இதனால் ஆத்​திரமடைந்த லோகேஷின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள், மருத்​து​வ​மனை நிர்​வாகத்​தினருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இந்த விவ​காரம் தொடர்​பாக கொடுங்​கையூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>லோகேஷ்</p></div>
‘முரசு’ தீவிர புயலின் தாக்கத்தால் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை, திருவள்ளூரில் தயார் நிலையில் 6 மீட்புக் குழுக்கள்

X