சிங்கப்பூரில் வேலை எனக்கூறி இன்ஸ்டாகிராம் தோழிகளிடம் ரூ.24 லட்சம் மோசடி: பட்டதாரி இளம் பெண் கைது

சிங்கப்பூரில் வேலை எனக்கூறி இன்ஸ்டாகிராம் தோழிகளிடம் ரூ.24 லட்சம் மோசடி: பட்டதாரி இளம் பெண் கைது
Updated on
1 min read

சென்னை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக இன்ஸ்டாகிராம் தோழிகளிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக பட்டதாரி இளம் பெண் கைது செய்யப்பட்டார். மலேசியாவைச் சேர்ந்தவர் ரேகா.

இவரும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுஷ்மிதா, கரூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28) ஆகிய 3 பேரும் இன்ஸ்டாகிராம் தோழிகள். இளம் பெண்களான இவர்கள் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பெறுகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து தோழிகள் வேறு சில நண்பர்களிடம் வசூலித்து பணம் கொடுத்தனர்.

மேலும் அவர், தான் அமேசான் நிறுவனத்தில் அதிகாரியாக உள்தாகவும், சிங்கப்பூரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மாதம் 4,000 டாலர் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை உண்மை யென நம்பிய தோழிகள் தனது வேலையை விட்டதோடு பணத்தையும் கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் மொத்தம் ரூ.24 லட்சம் வரை பெற்றுள்ளார். மேலும் தோழிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் ஐஸ்வர்யா வழங்கினார். அதன் பிறகுதான் அது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது.

இதுகுறித்து கேட்க முயன்றபோது, அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுஷ்மிதா உள்ளிட்ட தோழிகள் இந்த விவகாரம் தொடர்பாக தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து ஐஸ்வர்யாவை கைது செய்தனர். இவர் கரூரைச் சேர்ந்தவர் என்றாலும் கோடம்பாக்கத்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். மேலும் எம்எஸ்சி படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் வேலை எனக்கூறி இன்ஸ்டாகிராம் தோழிகளிடம் ரூ.24 லட்சம் மோசடி: பட்டதாரி இளம் பெண் கைது
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in