தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் வீடு புகுந்து பெண் கொலை: மகள்களை கடத்தி சிறைவைத்த இளைஞர் கைது

மேரி விஜிலா

மேரி விஜிலா

Updated on: 
2 min read

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு அவரது 2 மகள்களை கடத்திச் சென்று சிறைவைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளம் அருகே முதலூரைச் சேர்ந்​தவர் முத்து​கிருஷ்​ணன் (43). இவரது மனைவி மேரி விஜிலா (39). இவர்​களுக்கு 15 மற்​றும் 14 வயதில் 2 மகள்​களும், 12 வயதில் மக​னும் உள்​ளனர். இவர்​களது 15 வயது மகளும், ஆனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஞானப்​பிரகாஷ் (23) என்​பவரும் பழகி வந்​துள்​ளனர்.

இதை முத்து​கிருஷ்​ணன் குடும்​பத்​தினர் கண்​டித்​ததால் அவர்​கள் மீது ஞானப்​பிரகாஷுக்கு ஆத்​திரம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 2 மணி அளவில் முத்து​கிருஷ்​ணன் வீட்​டுக்​குள் நுழைந்த ஞானப்​பிரகாஷ், அங்கு தூங்​கிக் கொண்​டிருந்​தவர்​களை எழுப்பி தக​ராறில் ஈடு​பட்​டுள்​ளார்.

அப்​போது, மறைத்து வைத்​திருந்த அரிவாளால் முத்து​கிருஷ்​ணன், அவரது மனைவி மேரி விஜிலா மற்​றும் மகனை சர​மாரியாக வெட்​டியுள்​ளார். இதில், மேரி விஜிலா சம்​பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னர், முத்து​கிருஷ்ணனின் 2 மகள்​களை​யும் மிரட்டி, தனது வீட்​டுக்கு அழைத்​துச் சென்று அடைத்து வைத்​து​விட்டு ஞானப்​பிரகாஷ் தப்​பியோடி​விட்​டார்.

தகவலறிந்து சம்​பவ இடத்​துக்கு வந்த தட்​டார்​மடம் போலீ​ஸார், காயமடைந்த தந்தை, மகனை மீட்டு திருநெல்​வேலி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். ஞானப்​பிரகாஷின் வீட்​டில் அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த 2 சிறுமிகளை​யும் மீட்​டனர். தப்பி ஓடிய ஞானப்​பிரகாஷ் போலீ​ஸாரின் தீவிர தேடுதலில் கைது செய்​யப்​பட்​டார்.

விவசாயி கொலை: சாத்​தான்​குளம் அருகே உள்ள பன்​னம்​பாறை கீழத் தெருவை சேர்ந்​தவர் கொம்​பையா (64), விவசாயியான இவருக்​கும், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (42) என்​பவருக்​கும், நடைபாதை தொடர்​பாக 3 ஆண்​டுகளுக்​கும் மேலாக பிரச்​சினை இருந்து வந்​தது. நேற்று முன்​தினம் இர​வில் அவர்​களுக்​குள் மீண்​டும் தக​ராறு ஏற்​பட்​டது. ஆத்​திரமடைந்த ஆறுமுகம் அப்​பகுதி​யில் கிடந்த பெரிய கல்லை எடுத்து கொம்​பையாவை தாக்​கி​யுள்​ளார். இதில் சம்​பவ இடத்​திலேயே கொம்​பையா உயி​ரிழந்​தார். இது​குறித்து சாத்​தான்​குளம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்​தனர்.

மீனவர் கொலை: தூத்​துக்​குடி திரேஸ்புரம் முத்​தரையர் காலனியைச் சேர்ந்த பழனி (45), செந்​தில்​வேல் (30) ஆகிய இரு​வரும் சங்​கு​குளி தொழில் செய்து வந்​தனர். நேற்று காலை திரேஸ்புரம் கடற்​கரையில் இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதில் செந்​தில்​வேல் கத்​தி​யால் குத்​தி​யதில் பழனி சம்​பவ இடத்​திலேயே இறந்​தார். போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து, செந்​தில்​வேலை கைது செய்​தனர்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொலை செய்​யப்​பட்​டது, மக்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதற்கு கனி​மொழி எம்.பி. கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக சமூகவலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில், ‘தவெக ஆட்​சி​யில் தூத்​துக்​குடி மாவட்​டமே கொலைக்​களமாக மாறி​விட்​டது. எத்​தனை உயிர்​கள் போனாலும் தவெக அரசு நட​வடிக்கை எடுக்​காது என்ற தைரியத்​தில்​தான் இதுபோன்ற கொலைக் குற்​றங்​கள் தொடர்​கின்​றன. மக்​கள் மீது முதல்வர் விஜய் கருணைகாட்டி, நன்கு வேலை பார்க்கத் தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>மேரி விஜிலா</p></div>
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in