குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர் சிறையில் அடைப்பு
குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
Updated on
1 min read

சென்னை: புழல் அடுத்த சூரப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்த 25 வயது இளம்​ பெண், கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்​பவரை திரு​மணம் செய்​து​கொண்​டார்.

தம்​ப​தி​யிடையே ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக, கடந்த 2 மாதங்​களாக அந்​தப் பெண் தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார். தொடர்ந்து கணவர் தொல்லை கொடுத்து வந்​த​தால், அந்​தப் பெண் பட்​டாபி​ராம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதன் அடிப்​படை​யில், மகேஷ் கண்ணா மீது பெண் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்​நிலை​யில், நேற்று அந்த இளம்​பெண்ணை செல்​போனில் தொடர்​பு​கொண்ட நபர் ஒரு​வர், தான் மகேஷ் கண்​ணா​வின் வழக்​கறிஞர் என்று அறி​முகப்​படுத்​திக் கொண்​டார்.

அவர்​களின் குடும்​பப் பிரச்​சினையை தீர்த்து வைப்​ப​தாகக் கூறி, பெரம்​பூரில் உள்ள ஓர் ஓட்​டலுக்கு வரு​மாறு அந்த பெண்ணை அழைத்​துள்​ளார். அதை நம்பி ஓட்​டலுக்​குச் சென்ற பெண்​ணிடம், அந்த நபர் ஆபாச​மாகப் பேசி, பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

அந்த பெண் கூச்​சலிடவே அங்​கிருந்த பொது​மக்​கள், அந்த நபரைப் பிடித்து செம்​பி​யம் போலீ​ஸில் ஒப்​படைத்​தனர். பிடிபட்ட நபரிடம் நடத்​திய விசா​ரணை​யில் அவர் வழக்​கறிஞர் கிடை​யாது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யின் உதவி​யாள​ராக (டபே​தார்) பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற ஞானப்​பிர​காசம் (68) என்​பது தெரிய​வந்​தது. செம்​பி​யம் போலீ​ஸார் ஞானப்​பிர​காசம் மீது பெண் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். மேலும் இதில் கணவர் மகேஷ் கண்​ணாவுக்கு உள்ள தொடர்பு குறித்​தும் வி​சா​ரித்து வரு​கின்​றனர்​.

குடும்பப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in