ஷர்மிளா

ஷர்மிளா

புதுவை காவல்நிலையம் அருகில் இளம்பெண் நடுரோட்டில் கொலை

கொடூர செயலில் ஈடுபட்ட முன்னாள் நண்பர் போலீஸில் சரண்
Published on

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் இளம்​பெண்ணை எரித்​துக் கொன்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

புதுச்​சேரி உப்​பளம் நேதாஜி நகரைச் சேர்ந்​தவர் ஷர்​மிளா (28). தனி​யார் பள்ளி ஒன்​றில் ஆசிரிய​ராக பணி​யாற்றி வந்​தார். அப்​போது அங்கு பணி​யாற்​றிய இந்​திரா நகரைச் சேர்ந்த ஜோசப் என்​பவருடன் நட்பு ஏற்​பட்​டுள்​ளது. ஜோசப் ஏற்​கெனவே திரு​மண​மாகி, மனை​வியை பிரிந்து வாழ்​வதும், வேறொரு பெண்​ணுடன் நட்​பில் இருப்​பதும் சில நாட்​களில் ஷர்​மிளா​வுக்கு தெரிய​வந்​தது. இதனால் ஜோசப் உடனான நட்பை அவர் துண்​டித்​தார்.

இதன்​பிறகு ஜோசப், அடிக்​கடி ஷர்​மிளாவைச் சந்​தித்து வாக்​கு​வாதம் செய்து வந்​துள்​ளார். இதனால் பள்​ளி​யில் பிரச்​சினை ஏற்​பட, ஷர்​மிளா பள்​ளியி​லிருந்து வில​கி, அண்ணா சாலை​யில் உள்ள பிரபல​மான துணிக்​கடை​யில் வேலைக்​குச் சேர்ந்​தார். அங்​கும் அடிக்​கடி சென்று ஜோசப் தகராறு செய்து வந்​த​தாகத் தெரி​கிறது. இதுகுறித்து ஒதி​யஞ்​சாலை காவல் நிலை​யத்​தில் ஷர்​மிளா புகார் அளித்த நிலை​யில், போலீ​ஸார் ஜோசப்பை அழைத்து எச்​சரித்து அனுப்​பினர்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு ஷர்​மிளா வேலையை முடித்​து​விட்டு வீட்​டுக்கு ஒதி​யஞ்​சாலை காவல் நிலை​யம் அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அவரை வழிமறித்து ஜோசப் வாக்​கு​வாதம் செய்​துள்​ளார். ஷர்​மிளா அவரை திட்​டி​விட்​டு, அங்​கிருந்து கிளம்ப முயற்​சித்​தார். இதில் ஆத்​திரமடைந்த ஜோசப், பாட்​டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்​ரோலை ஷர்​மிளா மீது ஊற்றி தீ வைத்​தார். இதனால் உடல் முழு​வதும் தீ பற்றி எரிந்​தது.

இதில் அலறி துடித்த ஷர்​மிளாவை அங்​கிருந்​தவர்​கள் ஓடிவந்து தீயை அணைத்து மீட்டு ஆம்​புலன்ஸ் மூலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. கையில் ​கா​யம் அடைந்த ஜோசப், ஒதி​யஞ்​சாலை காவல் நிலை​யத்​தில் சரணடைந்​தார். போலீ​ஸார் அவரை ஜிப்​மர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர். சம்பவ இடத்தை சீனியர் எஸ்பி கலை​வாணன், எஸ்பி ஸ்ரு​தி, இன்​ஸ்​பெக்​டர் செந்​தில்​கு​மார் பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தினர்.

மேலும் புதுச்​சேரி நீதிபதி ஷர்​மிளா​விடம் நடந்த சம்​பவம் குறித்து வாக்​குமூலம் பெற்​றார். இந்​நிலை​யில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து ஒதி​யஞ்​சாலை போலீ​ஸார் ஜோசப் மீது கொலை வழக்கு பதிவு செய்​து, அவரை கைது செய்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>ஷர்மிளா</p></div>
எங்கே இருக்கிறார் நெதன்யாகு? - ‘ஆறு விரல்’ வீடியோவால் சர்ச்சை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in