அண்ணாநகரில் பரிதாபம்: மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு

அண்ணாநகரில் பரிதாபம்: மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய  பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை அண்​ணாநகரில் மழைநீர் வடி​கால் அமைப்​ப​தற்​காகத் தோண்​டப்​பட்ட பள்​ளத்​தில் தவறி விழுந்த பெண் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். இதுகுறித்து அண்​ணாநகர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அண்​ணாநகர் மேற்கு விரி​வாக்​கம் பாடி புதுநகர் 10-வது தெரு​வைச் சேர்ந்​தவர் கலா​வதி (59). இவர் அண்​ணாநகர் பகு​தி​யில் உள்ள பிரபல இனிப்பு கடை​யில் ஊழிய​ராக வேலை செய்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு வீடு அரு​கே​யுள்ள தேவால​யத்​துக்கு சென்​றார்.

அவர் அண்​ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலை​யம் அருகே உள்ள புளூ ஸ்டார் சந்​திப்பு பகு​தி​யில் நடந்து சென்​ற​போது, மழைநீர் வடி​கால் அமைப்​ப​தற்​காகத் தோண்​டப்​பட்டு மூடப்​ப​டா​மல் இருந்த பள்​ளத்​தில் தவறி விழுந்​தார்.

அன்று இரவு பெய்த பலத்த மழை​யால் அந்த பள்​ளத்​தில் சுமார் ஒன்​றரை அடி உயரத்​துக்கு தண்​ணீர் தேங்கி நின்​றது. தண்​ணீரிலும், சகதி​யிலும் சிக்​கிய கலா​வதி பலமுறை வெளியே வர முயன்​றும் முடிய​வில்​லை.

இதனை பார்த்த பொது​மக்​கள், கலா​வ​தியை காப்​பாற்ற முயன்​றனர். பள்​ளத்​தில் தேங்​கி​யிருந்த தண்​ணீரில் மின்​கசிவு இருக்​கலாம் என்ற அச்​சம் ஏற்​பட்​ட​தால், யாரும் தண்​ணீருக்​குள் இறங்க முடிய​வில்​லை. போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று மின்​வாரிய ஊழியர்​களின் உதவி​யுடன் பள்​ளத்​தில் சிக்​கி​யிருந்த கலா​வ​தியை மீட்டு வெளியே கொண்டு வந்​தனர்.

அவரை உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்ல முயன்​ற​போது, 108 ஆம்​புலன்ஸ் ஊழியர்​கள் பரிசோதனை செய்​தனர். அப்​போது கலா​வதி ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இதுகுறித்து அண்​ணாநகர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். முதற்​கட்ட விசா​ரணை​யில், கலா​வதி விழுந்த பள்​ளத்​தில் தேங்​கி​யிருந்த தண்​ணீரில் மின்​கசிவு ஏற்​பட​வில்​லை என்​பது தெரிய​வந்​துள்​ளது.

அண்ணாநகரில் பரிதாபம்: மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய  பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மனைவி பொற்கொடியிடம் 2 மணி நேரம் சிபிஐ விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in