

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடினர், இந்நிலையில் 9 நாட்களுக்கு பின்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை (37) கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
விசாரணை செய்த நீதிபதி, தர்ம முனீஸ்வரனை ஏப்.2 வரை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர், பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீசுவரன் பாளையங் கோட்டை சிறையில் அடைத் தனர். அங்கு அவரது எதிரிகள் சிறையில் இருப்பதால் பாது காப்பு கருதி, மதுரை மத்திய சிறைக்கு மாற்ற முடிவெடுத் தனர். அதன்படி பலத்த பாது காப்போடு அழைத்து வந்த விளாத்திகுளம் போலீஸார் மார்ச் 20-ல் நள்ளிரவில் தர்ம முனீஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.