கடற்படை அதிகாரி கொலை வழக்கில் மனைவி, காதலருக்கு மரண தண்டனை

உத்தர பிரதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடற்படை அதிகாரி கொலை வழக்கில் மனைவி, காதலருக்கு மரண தண்டனை
Updated on: 
1 min read

மீரட்: கடற்படை அதிகாரியைக் கொன்று உடலை புளூ டிரம்மில் அடைத்த வழக்கில் மனைவி, காதலருக்கு மரண தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த வணிக கடற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத். இவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி. சவுரப், லண்டனில் பணியாற்றி வந்த காலத்தில் முஸ்கானுக்கு சாஹில் சுக்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது. சவுரப் கடந்த ஆண்டு பிப்ரவரியில் லண்டனில் இருந்து திரும்பியது, இவர்களின் உறவுக்கு தடையாக அமைந்தது.

எனவே, அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி சவுரப்பை கத்தியால் குத்திக் கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, புளூ டிரம்மில் போட்டு சிமெண்ட் கலவையை ஊற்றி மறைத்தனர். இமாச்சலுக்கு தப்பியோடிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மீரட் நீதிமன்றம் நேற்று முஸ்கான், சாஹில் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்றத்தில் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷங்கள் எழுந்தன. சவுப்ரபின் தாய் ரேணு ராஜ்புத், இந்தத்தீர்ப்பை வரவேற்றார். அதேபோல, தங்கள் மகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என்று முஸ்கானின் பெற்றோர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

கடற்படை அதிகாரி கொலை வழக்கில் மனைவி, காதலருக்கு மரண தண்டனை
அரசுப்​ பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த ‘திறன் ப்ளஸ்’ திட்டம்: அக். 21 முதல் அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in