அதிகாரிகளை கொல்ல முயன்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அதிகாரிகளை கொல்ல முயன்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்​டம் போச்​சம்​பள்ளி அரு​கே​யுள்ள ஆனந்​தூரில் டிச. 27-ம் தேதி ஊத்​தங்​கரை வட்​டாட்​சி​யர் ராஜலட்​சுமி, துணை வட்​டாட்சி​யர்​கள் சகாதேவன், ஜெய​பால் மற்றும் அலுவலர்கள் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, அப்​பகு​தி​யில் உள்ள ஏரி​யில் மண் கடத்திய சிலரை தடுக்க முயன்றபோது, பொக்​லைன் வாகனத்தை ஏற்றி அதி​காரி​களைக் கொல்ல முயன்றனர். இது தொடர்​பாக செங்​கம்​பட்​டி சுரேஷ் (47), ஊத்​தங்​கரை செங்​கழுநீர்​பட்டி தங்​க​பாலு (35) ஆகியோரை போலீஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், அவர்​கள் இரு​வரை​யும் குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் ச.தினேஷ்கு​மார் உத்தரவிட்டார்.

அதிகாரிகளை கொல்ல முயன்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அடகு கடையில் நள்ளிரவில் திருட்டு முயற்சியை தடுத்த உரிமையாளர்: பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in