

திருநெல்வேலி: கூடங்குளம் காவல் நிலையத்தில்இளைஞர் பூச்சி மருந்து குடித்த சம்பவத்தில், போலீஸார் இருவர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (32). இவர் நேற்று முன்தினம் மாலையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக கூடங்குளம் போலீஸாரிடம் பிடிபட்டார். அவரை கூடங்குளம் தலைமைக் காவலர் சிவகுமார், காவலர் வேல்துரை ஆகியோர், அவரை காவல் நிலையம் அழைத்துச் வந்தனர்.
அப்போது திடீரென ரமேஷ் குமார் தனது பையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது இதையடுத்து அவர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி விசாரணை நடத்தி, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, தலைமைக் காவலர் சிவகுமார், காவலர் வேல்துரை ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.