காஞ்சிபுரம் | கோயில் திருவிழா தகராறில் 2 பேர் கொலை: பதற்றம் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு

விக்கி, சந்துரு

விக்கி, சந்துரு

Updated on
1 min read

காஞ்​சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்​தில் ஆடித்திரு​விழா நேற்று முன்​தினம் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

முதல் நாள் விழாவை ஒட்டி பொங்​கல் வைத்து வழி​பாடு நடத்​தப்​பட்​டு, இரவு சுவாமி வீதி​யுலா புறப்​படத் தயா​ரானது. அப்​போது அதே பகு​தி​யைச் சேர்ந்த போதை​யில் இருந்த சில இளைஞர்​கள் ஒலிபெருக்​கி​யில் கானா பாடல்​களை ஒலிபரப்​பக்கோரி தகராறில் ஈடு​பட்​டனர்.

இதற்கு அங்​கிருந்​தவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் வாக்​குவாதம் ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்து போலீ​ஸாருக்​குத் தகவல் தெரிவிக்​கப்​பட்​டதை அடுத்து அந்த கும்​பல் அங்​கிருந்து கலைந்து சென்​றது.

அதே பகு​தி​யைச் சேர்ந்த சந்​துரு (எ) சந்​திரசேகர் (27), விக்கி (எ) நீல​கண்​டன் (28) ஆகிய இரு​வருக்​கும் போதையி​லிருந்த பகவ​தி, கலைச்​செல்​வன், புஷ்ப​ராஜ் ஆகியோ​ருக்​கும் ஏற்​கெனவே முன்​விரோதம் இருந்​துள்​ளது.

இதன் விளை​வாக போதை கும்​பலைச் சேர்ந்த 3 பேரும் சேர்ந்து சந்​துரு, விக்கி ஆகிய இரு​வரை​யும் அரி​வாளால் சரமாரி​யாக வெட்​டி​விட்​டுத் தப்​பியோடினர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

தகவலறிந்த பொன்​னேரிக்​கரை போலீ​ஸார் விரைந்து வந்து உடல்​களை மீட்க முயன்​ற​போது, உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் தடுத்து நிறுத்தி வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். போலீ​ஸார் உரிய பாது​காப்பு வழங்​காததே இந்​தப் பிரச்​சினைக்​குக் காரணம் எனக் குற்​றஞ்​சாட்​டினர்.

சுமார் ஒன்​றரை மணி நேரப் பேச்​சு​வார்த்தைக்​குப் பிறகு உடல்​களை மீட்ட போலீ​ஸார், செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தலைமறை​வான குற்​ற​வாளி​களைப் பிடிக்க 3 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அசம்​பா​விதங்​களைத் தவிர்க்க படுநெல்லி கிராமத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p>விக்கி,&nbsp;சந்துரு</p></div>
நாடு முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டு திட்டம்: விரைந்து செயல்படுத்த ரயில்வே துறை முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in