மாணவிக்கு பாலியல் தொல்லை: தவெக நிர்வாகி மீது வழக்கு

Updated on: 
1 min read

நாகர்கோவில்: நாகர்​கோவி​லில் உள்ள கல்​லூரி​யில் பயிலும் மாணவி ஒரு​வர், கன்​னியாகுமரி மத்​திய மாவட்ட தவெக இளைஞர் அணி நிர்​வாகி​யான தனது தோழியுடன் நேற்று முன்​தினம் மாலை பேருந்​துக்​காக காத்​திருந்​தார்.

அப்​போது, மத்​திய மாவட்ட தவெக செயற்​குழு உறுப்​பினர் கிறிஸ்டோபர் அந்த வழி​யாக காரில் வந்​தார். அவரது காரில் இருவரும் ஏறினர். முதலில் தனது ஊரில் தவெக பெண் நிர்​வாகி இறங்​கிக்​கொண்​டார்.

கல்​லூரி மாணவியை அவரது ஊரில் கொண்டு விடுவ​தாக கூறி அழைத்​துச் சென்ற கிறிஸ்டோபர், பாதி வழி​யில் காரை நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்​துள்​ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரை கடுமையாக திட்​டி​விட்டு இறங்​கிச் சென்​றுள்​ளார்.

இது​குறித்து, தவெக நிர்​வாகி​யான தனது தோழி​யிடம் புகார் கூறி மாணவி அழுதுள்​ளார். இதையடுத்து அவர் கொற்​றிக்​கோடு காவல் நிலை​யத்​துக்கு மாணவியை அழைத்​துச் சென்று புகார் அளித்​துள்​ளார். ஆனால், வழக்கு பதிவு செய்​யாமல் போலீ​ஸார் அலைக்​கழித்​தனர்.

மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்த தகவல் நேற்று சமூக வலை​தளங்​களில் பர​வியது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அன்​சுல் நாகர் உத்​தர​வின் பேரில், தக்​கலை மகளிர் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி, கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வரு​கின்​றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தவெக நிர்வாகி மீது வழக்கு
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in