பெரம்பலூரில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: தவெக நிர்வாகிகள் 3 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம் தேவையூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகிகள்.

பெரம்பலூர் மாவட்டம் தேவையூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகிகள்.

Updated on
1 min read

பெரம்பலூர்: குன்னம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக தவெக-வைச் சேர்ந்த 3 பேரை மங்களமேடு போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் கிளியூர்- பெருமத்தூர் இடையே தினந்தோறும் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து, நேற்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் பேருந்து செல்ல வழிவிடாமல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவர்களை பேருந்து ஓட்டுநர் மோகன், ஹாரன் அடித்து முந்திச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூவரும் பேருந்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று தேவையூர் பகுதியில் வழிமறித்தது, தகராறு செய்துள்ளனர். அவர்களிடம் பேச பேருந்து ஓட்டுநர் மோகன் கீழே இறங்கி வந்தபோது, தகராறு செய்த மூவரும் மது போதையில் இருப்பது தெரியவந்தது. தொடர் வாக்குவாதம் செய்த 3 பேரும், ஓட்டுநர் மோகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இதனை தட்டிக்கேட்ட நடத்துநர் பெரியசாமியையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநர் மோகனை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்க சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து ஓட்டுநர் மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீஸார், மது போதையில் தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் கைதான மூவரும் தேவையூரைச் சேர்ந்த சதீஷ், சரவணன், ஜெகதீஷ் என்பதும் இவர்கள் தவெகவின் தேவையூர் கிளை நிர்வாகிகளாக இருப்பதும் தெரியவந்தது.

இச்சம்பவத்தால் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்தனர். பின்னர் மாற்று பேருந்து வரவழைத்து போலீஸார் அவர்களை சம்பவ இடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ஓட்டுநர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

<div class="paragraphs"><p>பெரம்பலூர் மாவட்டம் தேவையூரில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகிகள்.</p></div>
துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in