மரம் விழுந்து மின்கம்பி அறுந்தது: மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மரம் விழுந்து மின்கம்பி அறுந்தது: மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
Updated on
1 min read

கடலூர்: சேத்​தி​யாத்​தோப்பு அருகே மின்​கம்பி மீது மரம் விழுந்​த​தில் மின்​சா​ரம் பாய்ந்து 3 பேர் உயி​ரிழந்​தனர்.

கடலூர் மாவட்​டத்​தில் நேற்று காற்​றுடன் கூடிய கனமழை பெய்​தது. இந்​நிலை​யில், சேத்​தி​யாத்​தோப்பு அரு​கேயுள்ள சி.​சாத்​தமங்​கலம் கிராமத்​தில் நேற்று பிற்​பகல் ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்து மின்​கம்​பம் மீது விழுந்​தது. இதில் மின்​கம்​பம் உடைந்​தும், மின்​கம்பி அறுந்​தும் அருகே இருந்த வீடு​கள், தேவால​யத்​தின் மீது விழுந்​தன.

இதில், தேவாவல​யத்​தின் வெளியே அமர்ந்​திருந்த மரியசூசை (70), அவரது மனைவி பிளவுன்​மேரி (60) மற்​றும் ரோசாப்பூ என்​பவரது மனைவி வனதாஸ்​மேரி (70) ஆகியோர் மின்​சா​ரம் பாய்ந்து அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், அதே ஊரைச் சேர்ந்த கனக​ராஜ் (58) காயமடைந்​து, அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.

தகவலறிந்து வந்த ஒரத்​தூர் போலீ​ஸார் 3 பேரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சிதம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசா​ரித்து நடத்தி வரு​கின்​றனர். தொடர்ந்​து, சேத்​தி​யாத்​தோப்பு டிஎஸ்பி விஜிகு​மார், சிதம்​பரம் வட்​டாட்​சி​யர் கீதா மற்​றும் மின்​வாரி​யத் துறை​யினர் விபத்து நடந்த இடத்​தில் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

மரம் விழுந்து மின்கம்பி அறுந்தது: மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in