தூத்துக்குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது

தூத்துக்குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது செய்​யப்​பட்​டார்.

தூத்​துக்​குடி அருகே உள்ள முடி​வைத்​தானேந்​தல் கிராமத்​தைச் சேர்ந்தவர் பிரியா (39). அப்​பகு​தி​யில் கணினி மையம் நடத்தி வந்​தார். இவரது சகோ​தரி சுப்​புலட்​சுமி. கணவரை இழந்​தவர். இவருக்​கும், தட்​டார்​மடம் காவல் நிலை​யத்​தில் காவல​ராக பணி​யாற்றி வரும் முத்​துக்​குமாருக்​கும் பழக்கம் ஏற்​பட்டது.

இதில் சுப்​புலட்​சுமி​யின் 20 பவுன் நகைகளை முத்​துக்​குமார் அடமானம் வைத்​துள்ளார். அதை திருப்பி கொடுக்​குமாறுபிரியா முத்​துக்​கு​மாரை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்​தினம் இரவு, பிரியாவிடம் தகராறு செய்​துள்​ளார். தகராறு முற்​றவே மறைத்து வைத்​திருந்த அரி​வாளால், பிரியாவை வெட்டி கொலை செய்​து​விட்டு தப்​பினார். புதுக்​கோட்டை போலீ​ஸார் முத்​துக்​கு​மாரை கைது செய்​தனர். கைது செய்​யப்​பட்ட முத்​துக்​கு​மார் மீது ஏற்​கெனவே தனது மாம​னார் மற்​றும் உறவினரை கொலை செய்ய முயன்ற வழக்கு நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

தூத்துக்குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது
குன்னூர் அருகே வெடிக்காமல் இருந்த ஜெலட்டின் குச்சிகள் அகற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in