சாத்தூர் எஸ்.ஐ.யின் மனைவி இறப்பில் சந்தேகம்: அரசு மருத்துவமனை அருகே உறவினர்கள் சாலை மறியல்

அருண், இளவரசி

அருண், இளவரசி

Updated on
1 min read

விருதுநகர்: சாத்தூரில் எஸ்ஐ மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசியை சேர்ந்தவர் அருண்(28). சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பணியாற்றியபோது அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இளவரசி(23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனன்யா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சாத்தூரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை இளவரசி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூர் நகர்போலீஸார், இளவரசி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை குற்றச்சாட்டு: இதற்கிடையே, உயிரிழந்த இளவரசியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100-க்கும்மேற்பட்டோர் நேற்று காலைவிருதுநகர் அரசு மருத்துவமனை யில் குவிந்தனர். இளவரசி கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை அடித்து கொலை செய்த எஸ்.ஐ அருணை கைது செய்யக் கோரியும் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி யோகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட இளவரசியின் உறவினர்கள் மறுத்ததால் போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். இளவரசி இறப்பு குறித்து சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார். மறியலில் ஈடுபட்ட இளவரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறும்போது, ‘‘பணம் கேட்டு கொடுமைப்படுத்திய அருணை போலீஸார் கைது செய்து, நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறினர்.

<div class="paragraphs"><p>அருண், இளவரசி</p></div>
பூரண மதுவிலக்கு தோல்வியடைந்த திட்டம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in