பாதி விலையில் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: தலைமறைவாக இருந்த ஏஆர்டி நகைக்கடை நிர்வாகிகள் 3 பேர் கைது

பாதி விலையில் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: தலைமறைவாக இருந்த ஏஆர்டி நகைக்கடை நிர்வாகிகள் 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: முகப்​பேர் பகுதியை தலை​மை​யிட​மாகக் கொண்டு ‘ஏஆர்டி ஜுவல்​லரி’ என்ற பெயரில் நகைக்​கடை இயங்கி வந்​தது. இந்த நிறு​வனத்​தினர் பாதி விலை​யில் தங்கம் தரு​வ​தாக​வும், முதலீட்டு பணத்​துக்கு வாரம் 3 சதவீதம் வட்டி தரு​வ​தாக​வும் கவர்ச்​சிகர​மான பல்​வேறு திட்​டங்​களை விளம்​பரம் செய்​தனர்.

இதை நம்பி ஏராள​மானவர்​கள் கோடிக்​கணக்​கான பணத்தை முதலீடு செய்​தனர். இதையடுத்​து, இந்த நிறு​வனம் தமிழகமெங்​கும் கிளை​களை நிறு​வியது. சில நாட்​கள் வட்​டியை வழங்கி வந்த இந்த நிறு​வனம், பின்​னர் உறு​தி​யளித்​த​படி நடந்​து​கொள்​ளாமல் இழுத்​தடித்​தது.

அது மட்​டுமல்​லாமல் உரிமை​யாளர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் என ஒவ்​வொரு​வ​ராக தலைமறை​வாகினர். இதையடுத்து பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொது​மக்​கள் சம்​பந்​தப்​பட்ட நிறுவன அலு​வல​கத்​தில் முற்​றுகைப் போராட்​டம் நடத்​தினர். பின்​னர் இது தொடர்​பாக சென்னை அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸில் புகார் அளித்​தனர்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பண மோசடி நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து முதல் கட்​ட​மாக நிறுவன உரிமை​யாளர்​கள், நிர்​வாகி​கள் என 14 பேர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

இதன் தொடர்ச்​சி​யாக தலைமறை​வாக இருந்த இந்​நிறுவன நிர்​வாகி​கள் சென்னை அமைந்​தகரையைச் சேர்ந்த அந்​தோணி விமல் ராஜ் (34), கள்​ளக்​குறிச்​சி​யைச் சேர்ந்த ஷமீர் அகமது (28), கொரட்​டூரைச் சேர்ந்த பிரே​மாவதி (62) ஆகிய 3 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். தொடர்ந்து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

பாதி விலையில் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: தலைமறைவாக இருந்த ஏஆர்டி நகைக்கடை நிர்வாகிகள் 3 பேர் கைது
பெண் அதிகாரி புகைப்படத்தை ‘ஏஐ’ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in