ஐடி பெண் ஊழியரிடம் ரூ.8.53 லட்சம், 18 பவுன் நகைகள் மோசடி: சென்னையில் தம்பதி கைது

கைதான இருவர்

கைதான இருவர்

Updated on
1 min read

சென்னை: மழலையர் பள்ளி தொடங்க இருப்பதாக கூறி, ஐடி பெண் ஊழியரிடம் ரூ.8.53 லட்சம், 18 பவுன் நகைகள் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம், நியூ என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருபவர் திவ்யா (31). தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆலந்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ‘ஹெர்பல் லைப் நியூட்ரிஷன்’ சென்டருக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு சிகிச்சை பெற வந்த கற்பகம் (38) என்பவருடன் திவ்யாவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கற்பகமும் அவரது கணவர் சதீஷ்குமாரும் (41) ஆலந்தூர் பகுதியில் மழலையர் பள்ளி தொடங்க இருப்பதாகவும், அதற்காக பணம் தேவைப்படுவதாகவும் திவ்யாவிடம் கூறியுள்ளனர்.

மேலும், 3 மாதங்களில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய திவ்யா, பல்வேறு தவணைகளில் வங்கி பணபரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மொத்தம் ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை கற்பகத்திடம் கொடுத்துள்ளார். மேலும் சுமார் 38 பவுன் தங்க நகைகளையும் வழங்கியுள்ளார்.

இதற்கிடையே திவ்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தான் கொடுத்த பணம் மற்றும் தங்க நகைகளை திரும்ப தருமாறு கற்பகத்திடம் கேட்டுள்ளார். அப்போது கற்பகம் சுமார் 20 பவுன் தங்க நகைகளை மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள நகைகள் மற்றும் பணத்தை திரும்ப கொடுக்காமல் கற்பகமும், அவரது கணவர் சதீஷ்குமாரும் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து திவ்யா, பணம் மற்றும் நகைகளை மீட்டு தரக்கோரி புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பழவந்தாங்கல், இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த கற்பகம் (38) மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் (41) ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

<div class="paragraphs"><p>கைதான இருவர்</p></div>
கோயில் பணியாளர்களுக்கு பொதுச் சம்பள தொகுப்பு ஏற்படுத்த அமைச்சர் ரமேஷிடம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in