இரிடியம் பெயரில் ரூ.5.65 கோடி மோசடி: 6 பேரை கைது செய்த சிபிசிஐடி ​

இரிடியம் பெயரில் ரூ.5.65 கோடி மோசடி: 6 பேரை கைது செய்த சிபிசிஐடி ​
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: இரிடி​யம் விற்​பனை என்ற பெயரில் ரூ.5.65 கோடி மோசடி செய்த 6 பேரை சிபிசிஐடி போலீ​ஸார் கைது செய்​தனர்.

கோவையைச் சேர்ந்த திரு​மூர்த்தி என்​பவருக்​கு, போச்​சம்​பள்ளி நண்​பர் மூலம் அறி​முக​மான ஒரு கும்​பல், இரிடி​யம் விற்​பனை மூலம் பல கோடி ரூபாய் கிடைத்​த​தாக​வும், அந்​தப் பணம் இந்​திய ரிசர்வ் வங்​கி​யில் முடங்​கி​யுள்​ளது என்​றும் தெரி​வித்​துள்​ளது.

அந்​தப் பணத்தை விடுவிக்க ஆர்​பிஐ-க்கு செய​லாக்க கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். அதற்கு பணம் கொடுத்​தால், இரட்​டிப்​பாக திரும்ப வழங்​கு​கிறோம் என்​றும் அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதை உண்மை என நம்​பிய திரு​மூர்த்​தி, முதல்​கட்​ட​மாக ரூ.10 லட்​சம் கொடுத்​துள்​ளார். தொடர்ந்​து, திரு​மூர்த்​தியை டெல்​லிக்கு அழைத்த கும்​பல், ஆர்​பிஐ அதி​காரி​கள் என்று சிலரை அறி​முகப்​படுத்​தி, மேலும் ரூ.50 லட்​சத்தை திரு​மூர்த்​தி​யிடம் பெற்​றுள்​ளது.

பின்​னர், தான் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்த திரு​மூர்த்​தி, சில வாரங்​களுக்கு முன் கிருஷ்ணகிரி சிபிசிஐடி போலீ​ஸில் புகார் அளித்​தார். டிஎஸ்பி வினோத் தலை​மை​யில், ஆய்​வாளர்​கள் குமார், சந்​தோஷ், கோம​தி, சத்​திய சுதா, ஜெயக்​கு​மார், கேசவன் மற்​றும் போலீ​ஸார் கொண்ட 6 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டது.

விசா​ரணை​யில், அந்த கும்​பல் பிஹார், ஜார்க்​கண்ட், தெலங்​கானா உள்​ளிட்ட மாநிலங்​களைச் சேர்ந்த 23 பேரிடம், ரூ.5.65 கோடி வரை மோசடி செய்​திருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, மோசடி​யில் ஈடு​பட்ட கர்​நாடக மாநிலம் பெங்​களூரு சீனி​வாசன் (43), தெலங்​கானா ஜார்ஜ் தாமஸ் (53), ஜார்க்​கண்ட் குல்​ஷன் தராத் (41), பாட்னா சோனு குமார் துபே (34), கோபால் சேகர் (38), ஆஷிஷ் குமார் (25) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 2 மடிக்​கணினிகள், 8 செல்​போன்​கள், போலி அடை​யாள அட்​டைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இரிடியம் பெயரில் ரூ.5.65 கோடி மோசடி: 6 பேரை கைது செய்த சிபிசிஐடி ​
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in