சென்னை | அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: சகோதர்களான திமுக பிரமுகர்கள் மீது வழக்கு

சென்னை | அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: சகோதர்களான திமுக பிரமுகர்கள் மீது வழக்கு
Updated on
1 min read

சென்னை: அரசு வேலை பெற்​றுத் தரு​வ​தாக கூறி ரூ.10 லட்​சம் மோசடி செய்​த​தாக சகோ​தரர்​களான திமுக பிர​முகர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்பட்டுள்ளது.

விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனத்​தைச் சேர்ந்த ராஜேந்​திரன் மகன் சுந்​தரமூர்த்தி (29). இவர் 2022 ஆண்டு பொறி​யியல் படிப்பு முடித்​து​விட்டு வேலை தேடி வந்​துள்​ளார்.

அப்​போது அவரது தந்தை ராஜேந்​திரனுக்கு தெரிந்த நபர் மூலம் சென்னை ஆழ்​வார் திருநகரை சேர்ந்த திமுக பிர​முக​ரான நசீர் அகமத் (35) என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டது.

பின்​னர் நசீர் அகமத், ராஜேந்​திரனிடம் தனது சகோ​தரர் பஷீர் அகமத் திமுகவில் முக்​கிய பொறுப்​பில் உள்​ள​தாக​வும் அவருக்கு கட்​சி​யில் மிகுந்த செல்​வாக்கு இருப்​ப​தால் உங்​கள் மகனுக்கு அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். அது​மட்​டுமின்றி அரசு வேலை வாங்​கித் தர ரூ.10 லட்​சம் செல​வாகும் எனக் கூறி​யுள்​ளார்.

இதனை நம்​பிய ராஜேந்​திரன் தன் மகன் சுந்​தரமூர்த்​திக்​காக ரூ.10 லட்​சம் கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது. பணம் வாங்​கிய பிறகு நசீர் மற்​றும் பஷீர் இரு​வரும் கூறியது​போல் வேலை வாங்கி கொடுக்​க​வில்​லை​யாம்.

மேலும் பணத்​தை​யும் திருப்​பிக் கொடுக்​க​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக சுந்​தரமூர்த்தி சில தினங்​களுக்கு முன் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார்.

இதுகுறித்து விசா​ரணை நடத்த மதுர​வாயல் போலீ​ஸாருக்கு உத்​தர​விடப்​பட்​டது. அதன்​படி போலீ​ஸார் திமுக பிர​முகர் பஷீர் அகமத் மற்​றும் அவரது சகோ​தரர் நசீர் அகமத் இரு​வர் மீதும் மோசடி உள்​ளிட்ட பிரி​வின் கீழ் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

சென்னை | அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: சகோதர்களான திமுக பிரமுகர்கள் மீது வழக்கு
மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர்: பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in