பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்ட்டர் - ரவுடி கொட்டு ராஜா உயிரிழப்பு

ரவுடி வெள்​ளைக் காளியை கொல்ல முயற்சித்தவர்
பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்ட்டர் - ரவுடி கொட்டு ராஜா உயிரிழப்பு
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொட்டு ராஜா என்கிற அழகுராஜா என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டர்.

முன்னதாக, கடந்த 24-ம் தேதி பெரம்​பலூரில் போலீ​ஸ் வேனில் அழைத்​துச் சென்ற பிரபல ரவுடி வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​ற சம்பவத்தில் கொட்டு ராஜா முயற்சித்திருந்தார்.

குற்ற வழக்​கு​கள் தொடர்​பாக ரவுடி வெள்ளைக் காளியை, திண்டுக்கல் மற்​றும் புதுக்​கோட்டை நீதி​மன்​றங்​களுக்கு போலீஸார் அழைத்​துச் சென்​று​விட்டு மீண்​டும் சென்னைக்கு வேனில் அழைத்​துச் சென்று கொண்​டிருந்​தனர். அந்த வேனில் வெள்ளைக் காளி மற்​றும் 10 போலீ​ஸார் சென்​றனர்.

அப்போது பெரம்​பலூர் மாவட்​டம் எறையூர் சுங்​கச்​சாவடி அருகே வேனை நிறுத்​தி, ஒரு ஓட்​டலில் சாப்​பிடு​வதற்​காக வெள்​ளைக் காளி​யுடன் போலீ​ஸார் நடந்து சென்றனர். அப்​போது போலீஸ் வாக​னத்தை பின்​தொடர்ந்து 2 கார்​களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், திடீரென வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யது. இதில், காளி அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னார். இதில் 3 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசிய கும்​பலை பிடிக்க 5 தனிப்​படை அமைக்​கப்​பட்​டது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொட்டு ராஜா என்ற ரவுடியை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பெரம்பலூர் - திருமாந்துறை வனப்பகுதியில் வைத்துள்ளதாக தெரியவந்தது. அதை கைப்பற்ற போலீஸார் அங்கு கொட்டு ராஜாவை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது காவல் துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசியும், போலீஸ் எஸ்ஐ சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க அவர் முயற்சித்துள்ளார். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் நந்தகுமார் கொட்டு ராஜாவை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்ட்டர் - ரவுடி கொட்டு ராஜா உயிரிழப்பு
டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in