லாரி மீது கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் உயிரிழப்பு

லாரி மீது கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

சேலம்: அரியானூர் அருகே முன்​னால் சென்ற லாரி​யின் பின்​புறத்​தில் கார் மோதிய விபத்​தில் நண்​பர்​கள் 3 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் ஒரு​வர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கிறார்.

சேலம் அம்​மாப்​பேட்டை பட்​டைக்​கோயில் பகுதி​யைச் சேர்ந்த விக்​ரம் சூர்யா (23), பூலாம்​பட்​டியைச் சேர்ந்த முருகன் (41), சூரமங்​கலத்​தைச் சேர்ந்த கார்த்தி (35), அருண் ஆகியோர் நண்​பர்​கள். இவர்​கள் முருகனை பூலாம்​பட்​டி​யில் விட்​டுவிட்டு வரு​வதற்​காக நேற்று முன்​தினம் நள்​ளிரவு ஒரே காரில் புறப்​பட்​டனர். காரை அருண் ஓட்​டிச் சென்​றார்.

சேலத்தை அடுத்த அரியானூர் அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்​சாலை​யில் சென்​றபோது, சிமென்ட் மூட்​டைகளை ஏற்​றிச் சென்ற லாரி​யின் பின்​புறத்​தில் கார் மோதி​யது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்​தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்​பவ இடத்​துக்கு வந்த ஆட்​டை​யாம்​பட்டி போலீ​ஸார், காரில் சிக்​கி​யிருந்த 4 பேரை​யும் மீட்டு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு விக்​ரம் சூர்யா, முருகன், கார்த்தி ஆகியோர் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தனர். அருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கிறார். இந்த விபத்து குறித்து போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

லாரி மீது கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் உயிரிழப்பு
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in