வாரிசு சான்றிதழ் பெற ரூ.25 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

வாரிசு சான்றிதழ் பெற ரூ.25 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

சென்னை: வாரிசு சான்​றிதழ் பெற ரூ.25 ஆயிரம் லஞ்​சம் வாங்​கிய வரு​வாய் அதி​காரிக்கு 4 ஆண்டு சிறை தண்​டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை பழைய வண்​ணாரப்​பேட்டை பகு​தியை சேர்ந்​தவர் கிருஷ்ணவேணி (60). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்​.24-ம் தேதி தண்​டை​யார்​பேட்டை தாலுகா அலு​வல​கத்​தில் வாரிசு சான்​றிதழ் கோரி விண்​ணப்​பித்​தார். அங்கு பணி​யில் இருந்த வரு​வாய் ஆய்​வாள​ரான ஹரிஹரன், வாரிசு சான்​றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்​சம் கேட்​டுள்​ளார். இதுதொடர்​பாக கிருஷ்ணவேணி அளித்த புகாரின்​பேரில், லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் கடந்த 2014 நவ.18-ம் தேதி லஞ்​சம் வாங்​கிய வரு​வாய் ஆய்​வாளர் ஹரிஹரனை கையும், களவு​மாக பிடித்து கைது செய்​தனர்.

சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி வி.ஜெகந்​நாதன் முன்பு இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் உஷா​ராணி ஆஜராகி வாதிட்​டார். வழக்கை விசா​ரித்த நீதிப​தி, குற்​றம் சாட்​டப்​பட்ட வரு​வாய் ஆய்​வாளர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​துள்​ளார்​.

வாரிசு சான்றிதழ் பெற ரூ.25 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
​திரு​வை​யாற்​றில் ஜனவரி 3-ம் தேதி முதல் தியாக​ராஜர் சுவாமிகள் ஆராதனை விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in